சிம்புவோட காதலி டயானா எரப்பா கர்நாடகாவைச் சேர்ந்த பைங்கிளியாம்!

‘செக்க சிவந்த வானம்’ படத்தில், நடிகர் சிம்புவுக்கு கர்நாடகாவைச் சேர்ந்தடயானா எரப்பா என்பவர் ஜோடியாக நடித்துள்ளார்.

‘செக்கச் சிவந்த வானம்‘ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்திருப்பவர் கன்னட தேசத்து கனவுக் கன்னி டயானா எரப்பா.இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி நடிகை டயானா கூறுகையில், ‘‘கர்நாடக மாநிலம் கூர்க்தான் என்னோட சொந்த ஊர். 2011ல் மிஸ் இந்தியா போட்டியில் பங்கெடுத்த போட்டியாளர்களில் டாப்-10ல் நானும் இருந்தேன்.

‘செக்க சிவந்த வானம்’ டயானா எரப்பாவின் கவர்ச்சிப் படங்கள்!!

அப்போதான் என்னுடைய போட்டோக்களை மணிரத்னம் சார் பார்த்திருக்கிறார். முதல் படமே தமிழ் படமா இருக்கும்னு நினைச்சும் பார்க்கல. அதுவும் மணிரத்னம் சார் படம்.திடீர்னு ஒரு நாள் மெட்ராஸ் டாக்கீஸ் ஆபீஸ்லேருந்து போன் வந்தது. யாரோ தமாஷ் பண்றாங்கன்னு தான் நினைச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து ஆடிஷன் வச்சிட்டாங்க. பிறகு மணிரத்னம் சாரை பார்க்கணும்னு சொன்னதும் வானத்துல பறக்க ஆரம்பிச்சேன். அவரை சந்தித்து டயலாக் பேசி நடித்து காண்பித்தேன். அப்படியாகத்தான் முதல் பட வாய்ப்பு கிடைத்தது.

Actress @DayanaErappa Latest Pics #ArunPrasath Photography @arun_capture1 #CCV #ChekkaChivanthaVaanam #Promotion https://t.co/KuudMedvtk— Nikkil (@onlynikil) 1538648950000
சினிமால வரணும்னுதான் ரொம்ப நாளா எனக்குள் ஆசை இருந்தது. முதல் படமே இவ்வளவு பெரிய படமா அமையும்னு நான் நினைச்சும் பார்க்கல.மேலும் எந்த மொழி படமாக இருந்தாலும் இனிமேல் நடிப்பேன்’’என்கிறார் கன்னடத்துக்கு பைங்கிளி டயானா.

Gorgeous Actress @DayanaErappa Latest Photoshoot Shot by @kiransaphoto #CCV #ChekkaChivanthaVaanam #CCVPromotion… https://t.co/7Jw83lYSXs— Nikkil (@onlynikil) 1538718435000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *