முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி!

Tags : ACTRESS, KASTURI SHANKAR, ME TOO, ME TOO MOVEMENT, SEXUAL HARASSMENT, Category : KOLLYWOOD NEWS,

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். அவர் பாலியல் தொல்லைகளை சந்தித்ததாக இதற்குமுன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்த மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதில் “ஏன் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடவில்லை? தயக்கமா?” என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி “தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு,” என தெரிவித்துள்ளார்.


Share :

Related Posts