முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

#MeToo: ‘அனேகன்’ பட நடிகைக்கு நடந்த பாலியல் கொடுமை!

Tags : Amyra Dastur, Me Too, Me Too Movement, Sexual Harassment, Category : TAMIL NEWS,

தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டி பலர் மீது புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, கோலிவுட்டில் வைரமுத்து மீது சின்மயி புகார் கூறியுள்ளார். பாடகி சின்மயினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மீடூ இயக்கம் தற்போது இந்திய திரையுலகில் புயலை கிளப்பி வருகிறது. சினிமாவில் இருந்து வரும் பெண்கள் ஒவ்வொருவராக தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி தைரியமாக பதிவிட்டு வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் நானா படேகர் விகாஸ் பாகல், சுபாஷ் கபுர், நடிகர்கள் அலோக் நாத், சேத்தன் பகத், ஹிருத்திக் ரோசன் ஆகியோர் மீது பாலியல் சீண்டல்கள் பற்றி புகார் எழுந்தது.

இந்நிலையில் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக ‘அனேகன்’ படம் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தனக்கும் திரையுலகில் பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டதாகவும், அதனால் மன உளைச்சல்களுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைரா கூறுகையில் “என்னுடன் நடித்த ஒரு நடிகர், என்னைத் தவறான முறையில் கட்டி அணைத்தார். அதை தெரிந்து கொண்ட நான் டைரக்டரிடம் கூறினேன். அதை அவர் கண்டுகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். என்னுடைய காட்சிகளை வேண்டுமென்றே தாமதமாக படமாக்கினர்.

அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பும் கேட்கச் சொன்னார். என்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் யாரென்று நான் இப்போது கூற மாட்டேன். அவர்கள், இந்தத் துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்றும், யாரென்றும் அவர்களுக்கே தெரியும். ஒரு நாள், அவர்கள் யாரென்று பெயரை சொல்வேன்” என்றார்.

An actor squeezed himself against me during shoot says Actress Amyra Dastur.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts