முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

மூன்று நாட்களில் ரூ.20 கோடியைத் தாண்டிய செக்க சிவந்த வானத்தின் வசூல்!!

Tags : CCV, Chekka Chivantha Vaanam, Chekka Chivantha Vaanam Box Office, சிசிவி, சிம்பு, செக்க சிவந்த வானம், Category : TAMIL NEWS,

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘செக்க சிவந்த வானம்’ தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20.42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம், காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. மல்டி ஸ்டாரர் படமான இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதேரி, ஜெயசுதா, டயானா உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த வியாழக்கிழமையன்று இப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், படத்தில் அனைத்து ஹீரோக்களுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரசிகர்களும் படத்தை ரசித்து வருகின்றனர்.

#ChekkaChivanthaVaanam grossed a huge 1.01 CR on Satday in Chennai city.. Having a 1 CR+ day doesn’t happen often h… https://t.co/45WTdZlzAj— Kaushik LM (@LMKMovieManiac) 1538279162000
இந்நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. ‘செக்க சிவந்த வானம்’ சென்னையில் நேற்று ரூ.1.01 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாடு மொத்தமும் ரூ.7.32 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#ChekkaChivanthaVaanam #CCV TN Box Office: Day 1 – ₹ 6.82 cr Day 2 – ₹ 6.27 cr Day 3 – ₹ 7.31 cr Total – ₹ 20.40 cr— Manobala Vijayabalan (@ManobalaV) 1538303990000
செக்க சிவந்த வானம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.20.42 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts