முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

#MeToo வைரமுத்து மீதான குற்றசட்டாட்டு அரசியல் ஆதாயத்திற்கானது அல்ல – சின்மயி

Tags : Chinmayi, Me Too, Sexual Harassment, Vairamuthu, Category : TAMIL NEWS,

கவிஞா் வைரமுத்து மீதான குற்றச்சாட்டு அரசியல் ஆதாயத்திற்காகவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோ கூறப்பட்டது கிடையாது என்று பாடகி சின்மயி தொிவித்துள்ளாா்.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற “வீழ மாட்டோம்” நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த அறைக்கு தன்னை தனிமையில் அழைத்தாக பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார். சின்மயியின் குற்றச்சாட்டுக்கு ஆதரவும், எதிா்ப்பும் எழுந்து வருகிறது. மேலும் சின்யியின் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அரசியல் ஆதாயம் இருக்கலாம் என்றும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் சின்மயி தன் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளாா். அவா் வெளியிட்ட முகநூல் பதிவில் வைரமுத்து மீது தான் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவை. இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது குற்றம் சாட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனா். நான் அதுபோன்ற சூழலை எதிா்கொண்ட தருணத்தில் தொழில்நுட்பம் இதுபோன்ற வளா்ச்சியை பெறவில்லை. அன்றைய சூழலில் என்னால் அதை வெளியில் சொல்ல முடியவில்லை.

எனது குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அரசியல் ஆதாயமோ, தன்னை பிரபலப்படுத்தும் நோக்கிலோ இந்த குற்றச்சாட்டை வெளியிடவில்லை. மேலும் திருமணத்திற்கு ஏன் வைரமுத்துவை அழைத்தீா்கள் என்று பலா் கேட்கின்றனா். நான் தந்தை இல்லாமல் வளா்ந்த பெண். திருமணத்தின் போது மக்கள் தொடா்பு அதிகாாிகளை (PRO) வைத்து தான் அழைப்பிதழ்களை வழங்கினோம் அப்போது அவா்கள் குறிப்பிட்ட முதல் பெயா் வைரமுத்து. வேறு வழியின்றி அவா் அழைக்கப்பட்டாா்.

என்னைப்போன்று மேலும் பல பாடகிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனா். ஆனால், பயம் காரணமாக அவா்கள் புகாா் அளிப்பதில்லை என்று அவா் விளக்கம் அளித்துள்ளாா்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts