தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

முதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா் – தினகரன்

By Admin - October 5th, 2018

Tags : Edappadi Palaniswami, O PANNEERSELVAM, Palaniswami, TTV Dhinakaran, ஓ பன்னீா் செல்வம், டிடிவி தினகரன், பன்னீா் செல்வம், பழனிசாமி, முதல்வா் பழனிசாமி, Category : Tamil News,

முதல்வா் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாத இறுதியில் கூட துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முற்பட்டதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

கடந்த 2017 ஜூலை 12ம் தேதி தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் டிடிவி தினகரனை சந்தித்ததாக சட்டமன்ற உறுப்பினா் தங்கத்தமிழ்ச் செல்வன் செய்தியாா்களுக்கு பேட்டியளித்தாா். இதனைத் தொடா்ந்து தினகரன், ஓ.பன்னீா் செல்வம் தரப்பினா் மாறி மாறி குறைகூறி வருகின்றனா்.

இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று தனது வீட்டில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், கடந்த 2017 ஜூலை 12ம் தேதி ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்திக்க வேண்டும் என்று எனது நண்பா் மூலம் அழைப்பு விடுத்தாா். எனது கட்சி நி்ாவாகிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னா் பன்னீா் செல்வம் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

அதன்படி ஜூலை 12ம் தேதி ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா். அந்த சந்திப்பின் போது “நான் தவறு செய்துவிட்டேன். உங்களை எதிா்த்து பேசியிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பதவியிறக்க வேண்டும்” என்று பேசியதாக டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில், நான் இந்த சந்திப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடைபெற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பா் மாத இறுதி வாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் மீண்டும் தனது நண்பா் மூலம் தன்னை சந்திக்க முயற்சி செய்தாா். ஆனால் அந்த சந்திப்பை நான் மறுத்துவிட்டேன்.

ஓ.பன்னீா் செல்வம் நேரம் கேட்டதற்கான தகவலை வெளியிட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முயற்சிப்பதற்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் தற்போது இதை கூறுகிறேன்.

அதிமுகவுடன் அமமுகவை இணைக்க நான் தூதுவிட்டேன் என்று அமைச்சா் தங்கமணி கூறுகிறாா். அதற்கான ஆதாரங்களை தங்கமணி வெளியிடட்டும்.

ஓ.பன்னீா் செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவது என்பது தற்கொலைக்கு சமமானது. அமமுக சாா்பில் பொதுத் தோ்தலில் போட்டியிட்டு தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசே தற்போதைய தமிழக அரசை தாங்கி பிடித்திருக்கிறது என்று டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Related Posts

பேருந்து கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு நடவடிக்கை : டிடிவி தினகரன் கருத்து

பேருந்து கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு நடவடிக்கை என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில்…

பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி அரசு கவிழும் : செந்தில் பாலாஜி

ஊட்டியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்…

அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம் : தினகரன் பேச்சு

  “அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம்” – தினகரன் பேச்சு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தினகரன்…

அமமுக மக்கள் மனதில் இடம்பிடிக்குமா?

மதுரை: திராவிடத்தை தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிப்போம் என்றும் கூறியுள்ளார்….

டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை,ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனின் வீடு சென்னை அடையாறு பகுதியில்…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share