கோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை! – tamil

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வட சென்னை படம் 2 நாட்கள் வரை ரூ.10.5 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் வட சென்னை. தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் ரூ.7.24 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. 2ம் நாள் முடிவில் ரூ.3.5 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.10.5 கோடி வரையில் வசூல் கொடுத்துள்ளது.

சென்னையில் மட்டும் 2 நட்கள் முடிவில் ரூ.1.5 கோடி வரையில் வசூல் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் ரூ.65 லட்சம் வரையிலும், அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ரூ.1.5 கோடி வரையிலும் வசூல் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு போட்டியாக வந்த சண்டக்கோழி 2 படம் ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#VadaChennai is a rare movie in which every actor scores.. One of the Top scenes in terms of audience appreciation..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *