முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Tags : Dmdk, Tamilisai, Treatment, Vijayakant Hospital, Vijayakanth, தேமுதிக, விஜயகாந்த், Category : TAMIL NEWS,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவருடைய அரசியல் பொறுப்புகளை அவர் மனைவி பிரேமலதா கவனித்து வந்தார். அமெரிக்காவில் இருந்ததால், கருணாநிதியின் இறுதி சடங்கிற்குக் கூட அவரால் வர முடியவில்லை.

சுமார் 20 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவர், நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கடந்த மாதம் துவக்கத்தில், விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என்று குறிப்பிட்டார். மேலும், பாஜக மாநில தலைவர் தமிழிசையும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டார்.

இந்நிலையில், இன்று மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேமுதிக வட்டாரங்கள் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts