முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

Sandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2

Tags : DHANUSH, SANDAKOZHI 2 IN TAMILROCKERS, TAMILROCKERS, VADA CHENNAI, VADA CHENNAI IN TAMILROCKERS, VISHAL, Category : TAMIL NEWS,

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான ’வடசென்னை’ மற்றும் ’சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு படங்களும், ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் கனவுப் படமாக பார்க்கப்பட்டும் ’வடசென்னை’, 29 மாதங்கள் உழைப்பில் தயாரானது. வடசென்னை பகுதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திர கனி போன்றோர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் ‘வடசென்னை’ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ’வடசென்னை’ படம் வெளியான ஒரே நாளில், ஆன்லைனில் முழு படத்தையும் வெளியிட்டு, ஒட்டு மொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், சண்டக்கோழி 2 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களையும் தனித்தனியே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான தனுஷ், விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டு படங்களும் தமிழ்ராக்கர்ஸில் வெளிவந்துள்ளது திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்ற அச்சம் படக்குழுவுக்கு எழுந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால், சமீபத்தில் பைரசிக்கு உறுதுணையாக இருந்த 10 திரையரங்குகளில் எந்த படங்களும் வெளியிடப்படாது என உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முன்னரே, அவரது நடிப்பில் உருவான ’சண்டக்கோழி 2’ படம் தமிழ்ராக்கர்ஸில் வெளிவந்து அதிர்ச்சியை அளித்துள்ளது. எனினும் பைரசியை ஒழிக்க தொடர்ந்து தமிழ் தயாரிப்பாளர் சங்கம் கடுமையான விதிமுறைகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.


Share :

Related Posts