Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.ஆனால் அந்த மனு குறித்து பிரதமர் அலுவலகம்  எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து பேச இருப்பதாக சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பர்க்கபட்டது. இந்நிலையில் பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ளார்.இன்று பிரதமரை சந்திக்கும் முன் நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள மக்களவை துணை சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க எம்.பிக்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.பன்னீர்செல்வம்- தினகரன் சந்திப்பு தொடர்பான சில தகவல்கள் வெளியாகி பரபரப்பான அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவி வரும் வேளையில், பிரதமரை, தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.இந்தச் சந்திப்பில், எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அமைச்சரவை ஒப்புதலை விரைவில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.


விஜய்க்குப் போட்டியாக அரசியலுக்கு வருகிறாரா காமெடியன் கருணாகரன்?

வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது – டிடிவி தினகரன் கிண்டல்



அண்மை செய்திகள்