முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தொழிலை ஒழுங்காக பாரு... விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் அட்வைஸ்!

Tags : Films, Minister, Rp Uthayakumar, Sarkar Audio Launch, Vijay Speech, அமைச்சர், அரசியல், ஆர்.பி. உதயகுமார், சர்கார், விஜய், Category : TAMIL NEWS,

நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில், காந்தி ஜெயந்தியான நடைபெற்றது.

அரசியலை மெர்சல்…..
இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், “மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, இதில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார். எல்லோரும் கட்சித் தொடங்கி, பிரச்சாரம் செய்து, தேர்தல்ல நிப்பாங்க, நாங்க சர்கார் அமைத்து தேர்தல்ல நிக்கப்போறோம்.

அனல் பறக்க அரசியல்….
நிஜத்தில் முதல்வரானால், முதல்வராக நடிக்க மாட்டேன். லஞ்சம், ஊழல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்வதால், கீழ்மட்டத்திலிருப்பவர்கள் ஊழல் செய்வார்கள். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தலைவன் சரியாக இருந்தால், கட்சி சரியாக இருக்கும். வாழ்க்கையில் அடிப்பட்டு கீழே இருந்து ஒருவன் மேலே வருவான், அவன் தலைமையில் ஒரு சர்கார் நடக்கும்” என அனல் பறக்க, படத்தில் வருவது போல விழா மேடையில் அனல் பறக்க, அரசியல் பேசினார்.

தொழிலை ஒழுங்காக பாரு….
இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், ‘சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். திருவிழாவுக்கு வருவோரெல்லாம், சாமியாக முடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள்.’ என்றார்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts