குற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை

சென்னை : தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றால் நான் கூறும் ஆலோசனையை கேளுங்கள் என எச். ராஜா கூறியுள்ளார்.

மீ டூ விவகாரம் காட்டுத் தீ போன்று எரிந்து கொண்டிருக்கின்றது. பாடகி சின்மயி மீ டு மூலம் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதைத் தொடர்ந்து பலரும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

எச் ராஜா ஆலோசனை :மத்திய அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, புகார் சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

அதே போல் வைரமுத்து அவர்களும், அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப கொடுத்துவிட்டு, வழக்கு தொடர்வது தான் சிறந்தது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

Pl demand that Mr. Vairamuthu to surrender all the awards given to him H Raja (@HRajaBJP) 1539781398000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *