முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தீபாவளியின் போது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Tags : DIWALI, DIWALI 2018, HEAVY RAIN, TAMILNADU, WEATHER NEWS, Category : TAMIL NEWS,

தீபாவளியன்று இரவு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் நவம்பர் 7 ஆம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பலரும் புத்தாடைகள், வான வேடிக்கைகள் என தீபாவளிப் பண்டிகையை விமர்சியாக கொண்டாடக் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, பட்டாசுக்களுக்கு தடைவிதிக்கக் கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியன்று இரவு 8 முதல் 10 மணிவரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், உலகளாவிய வானிலை அமைப்பானது, நவம்பர் 1 ஆம் தேதி முதல் வடக்கிழக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தீபாவளி இரவன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Share :

Related Posts