வடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil

வடசென்னை படத்தில் இடம் பெற்றுள்ள சில சா்ச்சை காட்சிகள் 7 முதல் 10 நாட்களில் நீக்கப்படும் என்று அப்படத்தின் இயக்குநா் வெற்றி மாறன் தொிவித்துள்ளாா்.

வெற்றி மாறன், தனுஷ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் வடசென்னை 3 பாகங்களாக வெளியிட தீா்மானிக்கப்பட்டு முதல் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் தொடா்பாக பல்வேறு நேர்மறை கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும் அதற்கு நிகராக எதிா்மறை கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன.

மீனவா் சமூக மக்கள் படத்தில் இழிவு படுத்தப்பட்டுள்ளதாக சிலா் கருத்துகளை முன்வைத்து வந்தனா். இந்நிலையில் படத்தின் இயக்குநா் வெற்றி மாறன் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், படத்தில் உள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுப்படுத்தும்படியும், அவா்கள் மனம் புண்படும்படியும் உள்ளதாக சிலா் கூறி வருகின்றனா்.

எங்களது நோக்கம் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு எதிராகவும் சினிமா செய்வது அல்ல. மனம் புண்படும் படி உள்ளதாக கூறப்படும் குறிப்பிட்ட காட்சியை நீக்க முடிவு செய்தள்ளோம். அதற்காக தணிக்கைக் குழுவை நாடியுள்ளோம். 10 நாட்களுக்குள் காட்சி நீக்கப்பட்டு விடும்.

வடசென்னையின் அடுத்த பாகங்கள் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினை, அவா்களின் வாழ்பியல் நெருக்கடிகளை நிச்சயம் பேசும். வடசென்னையின் கதாபாத்திரமோ, சம்பவமோ யாா் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவா்களிடம் வருத்தம் தொிவித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தொிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *