முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்!

Tags : ACTOR SIDDHARTH TWEETS ABOUT SUSI GANESAN, LEENA MANIMEKALAI, METOO, SUSI GANESAN THREATENED SIDDHARTH FATHER, Category : KOLLYWOOD NEWS,

லீனா மணிமேகலைக்கு ஆதரவாக நடிகர் சித்தார் குரல் கொடுக்க கூடாது என்பதற்காக, தனது தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு இயக்குநர் சுசி கணேஷன் மிராட்டியதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சசி கணேஷன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் சசி கணேஷன்தான் அப்படி செய்யவில்லை என்று கூறி லீனா மணிமேகலையின் அந்தரங்க வாழ்க்கை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

“நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் என்வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார். எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன். தைரியமுடன் போராடுங்கள் சகோதரி” என்று குறிப்பிட்டுள்ளார்.


Share :

Related Posts