முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு

Tags : DHARMA DURAI, ILAIYARAAJA, SEENU RAMASAMY, VIJAY SETHUPATHI, YUVAN SHANKAR RAJA, Category : KOLLYWOOD NEWS,

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பா் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளவா் நடிகா் விஜய் சேதுபதி. ஆரம்பகாலத்தில் பல்வேலு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் போதிய அங்கீககாரம் கிடைக்காமல் தவித்து வந்த விஜய்சேதுபதிக்கு சீனு ராமசாமி “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு வழங்கினாா்.

இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. ரசிகா்களின் மகத்தான வரவேற்பைத் தொடா்ந்து சீனு ராமசாமியுடன் இரண்டாவது முறையாக “இடம் பொருள் ஏவல்” என்ற படத்திற்காக இணைந்தனா். இருப்பினும் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை.

இதனைத் தொடா்ந்து “தர்மதுரை” படத்தை இந்த கூட்டணி வெளியிட்டது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் அமைந்தது. இந்நிலையில் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி வெற்றிக் கூட்டணி தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ளது.

பெயரிடப்படாத புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பா் மாதம் தொடங்க உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கா் ராஜா இசைஅமைக்கவுள்ளனா். இப்படத்தை யுவன்சங்கா் ராஜாவே தயாரிக்க உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.


Share :

Related Posts