நீங்க என்ன பேசனும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்” -விஜய்க்கு அஜித் ரசிகை கட்டளை

தளபதி விஜய் என்ன பேச வேண்டும் என்று கூட தல ரசிகன் தான் முடிவு பண்ணுவான் என டுவிட்டரில் விமர்சனம் கிளம்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 2ம் தேதி ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ‘சர்கார்’திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் விஜய் பேசிய பஞ்ச் வசனம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

விஜய் பேசியாதவது:நிகழ்ச்சியில் தளபதி விஜய் பேசும் போது ,

“ உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா நம்ம லைப் ஜம்முனு இருக்கும்” என பேசினார். மேலும் இதை யார் எழுதினான்னு தெரியல, ஆனா நான் இதைத்தான் பின்பற்றுகிறேன் என்றார். அதற்கு விஜய்யின் பேச்சுக்கு அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா நம்ம லைப் ஜம்முனு இருக்கும்— கயல்விழி (@kayal_twitz) 1512048769000

அஜித் ரசிகையின் டுவிட்:விஜய்யின் டயலாக் குறித்து அஜித் ரசிகை ஒருவர் தனது டுவிட்டரில், “என்னோட லைன்ஸ் தான் அண்ணா அந்த டிவிட் …என்னோட லைன்ஸ பாலோவ் பண்றீங்கனு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு …வாழ்த்துகள் அண்ணா @actorvijay (குறிப்பு ; டிவிட் கமெண்டில் பார்க்கவும் )” என பதிவிட்டிருந்தார்.

என்னோட லைன்ஸ் தான் அண்ணா அந்த டிவிட் …என்னோட லைன்ஸ பாலோவ் பண்றீங்கனு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு …வாழ்… https://t.co/NSHrUAE9dE— கயல்விழி (@kayal_twitz) 1538546731000

விஜய் பேசுவதை நாங்க தான் முடிவெடுப்போம்:தல அஜித் ரசிகையான அந்த ரசிகை அடுத்தடுத்த பதிவில், “நாங்க என்ன பேசனும்னு நாங்க தான் முடிவு பண்ணனும் நீங்க என்ன பேசனும்னும்னும் நாங்க தான் முடிவு பண்ணனும்.” என பதிவிட்டுள்ளார்.

நாங்க என்ன பேசனும்னு நாங்க தான் முடிவு பண்ணனும் நீங்க என்ன பேசனும்னும்னும் நாங்க தான் முடிவு பண்ணனும் #தலஃபேன்ஸ்… https://t.co/u0uo3UrPIH— கயல்விழி (@kayal_twitz) 1538546266000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *