முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தொடரும் ஏ.ஆர்.முருகதாஸின் கதை திருட்டு..! சர்ச்சையில் சிக்கிய விஜயின் 'சர்கார்'

Tags : Sarkar, Tamil Cinema News, Thalapathy, Vijay, Category : KOLLYWOOD NEWS,

மீண்டும் உதவி இயக்குநரின் கதையை திருடி படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ். சர்கார் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் வருண் புகார் அளித்துள்ளார்.
உதவி இயக்குநர் வருண் என்பவர் ‘செங்கோல்’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் செங்கோல் கதை தான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படத்தின் கதை என்றும், செங்கோல் கதை திருடப்பட்டு, இந்த சர்க்கார் திரைப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செங்கோல் கதாசிரியர் வருண் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். பாக்கியராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் இதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக விஜய், முருகதாஸ் கூட்டணி இணைந்திருந்த கத்தி படத்திற்கும் இதேபோன்றோரு பிரச்சனை எழுந்தது குறிப்பிடத்தக்கது


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts