முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சிறுவயதில் பாலியல் தொல்லை: டுவிட்டரில் மனம் திறந்த பிரபல பாடகி!

Tags : Chinmayi Sripada Tweets, Me Too Hashtag, Sexual Abuse, Singer Chinmayi Sripada, Category : TAMIL NEWS,

பிரபல பாடகி சின்மயி, சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான சீண்டல்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மனம் திறந்துள்ளார்.

சமீப காலமாக திரைத்துறையில் இருக்கும் நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி, சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான சீண்டல்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் தற்போதைய இணையம் மூலமாக தான் அனுபவித்து வரும் இணைய பாலியல் சீண்டல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து பாடகி சின்மயி, தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

More and more male victims https://t.co/R8IWpoB9mA— Chinmayi Sripaada (@Chinmayi) 1538924246000
எனக்கு 8 அல்லது 9வயது இருக்கும். அம்மாவுடன் ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். நான் அங்கு தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ என்னை தொடுவதாக உணர்ந்தேன். இது குறித்து அம்மாவிடம் சொன்னேன். எனக்கு 10 அல்லது 11 வயது இருக்கும் டிசம்பர் மாத கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த ஒரு முதியவர் எனது தொடையை கிள்ளிக் கொண்டே இருந்தார்.

சமீபத்தில் ஒருவர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். காலப்போக்கில் அவர், என் கருத்துக்கு ஆதரவளிப்பதுபோன்று பாலியல் ரீதியாக பேச ஆரம்பித்தார். டார்லிங்..ஸ்வீட் ஹார்ட்… என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார். நான் அவரை தவிர்த்து விட்டேன். இப்போது எனக்கு எதிராக கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாடகி சின்மயின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts