பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது, விசாரிக்கப்பட வேண்டியது: தமிழிசை!

சமூக வலைத்தளங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட் என நீண்டு, தற்போது கோலிவுட்டிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் பல தேசிய விருதுகள் வென்ற முன்னணி எழுத்தாளரும், பாடலாசிரியருமான வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன், தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்துவைக் குற்றம்சாட்டி அனுப்பிய வாட்ஸ்-அப் செய்தியை பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது.

பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செ… https://t.co/GrcI6G6wpl— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 1539196073000
அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Singer Chinmayi words should be listen and investigated says Tamilisai Soundararajan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *