முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

டி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா? தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி!

Tags : CM PALANISWAMI, JAYAKUMAR AUDIO ISSUE, THANGATAMILSELVAN, TTV DINAKARAN, Category : TAMIL NEWS,

சமூக வலைத்தளங்களில் #MeToo என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இது தவறான முன்னுதாரணமாக இருந்து விடக் கூடாது என்று பலரும் அறிவுரை கூறுகின்றனர்.

நாளுக்கு நாள் பல்வேறு பிரபலங்களின் பெயர், #MeToo விவகாரத்தில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் பெண் ஒருவரிடம் அவரது கருவைக் கலைக்க வற்புறுத்துவது போன்று உரையாடல் நிகழ்ந்துள்ளது. அது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Jayakumar: அது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்!

மேலும் ஒளிந்து கொண்டே கிரிமினல் வேலை செய்வதில் டிடிவி தினகரன் கில்லாடி. அப்படித்தான் அவரது ஆதரவாளர்களை தற்போது குற்றாலத்தில் மறைத்து வைத்துள்ளார் என்று கூறினார்.

Esakki Resort: இசக்கி ரிசார்ட்டில் 18 எம்.எல்.ஏக்கள் கூட்டாக குதூகலம்!

இதற்கு பதிலளித்து குற்றாலத்தில் தங்கியுள்ள தங்கதமிழ்ச்செல்வன், தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழாவில் புனித நீராடி விட்டு ஓய்வெடுப்போம்.

இரண்டு நாட்கள் கழித்து, சென்னைக்கு திரும்புவோம். ஜெயக்குமார் ஆடியோவிற்கும், டிடிவி தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டியது தானே. இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் டி.என்.ஏ சோதனைக்கு தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

TN CM Palaniswami should order investigation in Jayakumar audio issue says ThangaTamilSelvan.


Share :

Related Posts