Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்- விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்


வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்தனர். ஹாலிவுட் திரையுலகில் இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

இந்திய திரைத்துறையில் ஆந்திராவை சேர்ந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, ’தீராத விளையாட்டு பிள்ளை’ உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்த தனுஸ்ரீ தத்தா உள்ளிட்டோர், தங்களிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் சூட்டை கிளப்பி வரும் நிலையில், தமிழ் திரையுலகில்
நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

On lyricist Vairamuthu https://t.co/c6DwYWOO6C— Sandhya Menon (@TheRestlessQuil) 1538992598000
பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் தெரிவித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக டிவிட்டரில் சந்தியா மேனன் பதிவிட்டுள்ளதாவது:

"எனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென தன்னை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அதைத்தொடர்ந்து, நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இருக்கும் அறையில் தனியாக இருக்கவே எனக்கு நடுக்கமாக இருக்கும். பணியின் காரணமாக அப்படி ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், எப்போதுமே நிறைய பேர் இருக்கும்போது மட்டுமே செல்வேன்.

வைரமுத்து பாலியல் ரீதியாக பெண்களை சீண்டுபவர் என்பது சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை அடக்கி விடுவதால், யாருமே அவரை எதிர்ப்பதில்லை. இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை"

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், சந்தியா மேனனின் இந்த பதிவை பாடகி சின்மயி ஸ்ரீபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரில் படிக்கும் மாணவி ஒருவர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான ட்வீட்டை சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


“வைரமுத்து இடமிருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். என் தாத்தாவின் வயது இருக்கும் அவர், என்னை பாலியல் ரீதியாக அணுகினார். சுதாரித்துக்கொண்ட நான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்பு கொண்ட வைரமுத்து, தன் மனைவியிடம் இந்த விவகாரம் பற்றி சொல்ல வேண்டாம் என்று வேண்டினார். நானும் சொல்லவில்லை. என் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை கூறுகிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்” என்று அந்த பதிவில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கவிஞர் வைரமுத்து பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு இந்து அமைப்புகள், வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போர் கொடி தூக்கின.

இந்நிலையில் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறியுள்ளது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் கைது!

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் தவறில்லை: டிடிவி தினகரன்

Related Posts

ஐபிஎல் முற்றுகை : அமீர், பாரதிராஜா வைரமுத்து, கௌதமன் கைது

 ஐபிஎல் போட்டியை முற்றுகையிடச் சென்ற தமிழர் கலை பண்பாட்டு பேரவையைச் சேர்ந்த பாரதிராஜா, அமீர், கௌதமன், வைரமுத்து ஆகியோரை கைது…


Kaviperarasu Vairamuthu’s Press note regarding Kabali issue !! 

​#Kaviperarasu #Vairamuthu’s Press note regarding #Kabali issue !! https://t.co/bXPqPT0REd


நித்தியானந்தாவின் சிஷ்யையின் அருவருப்பான வீடியோ!

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறிய வைரமுத்துவுக்கு கண்டனங்கள் பெருகி வரும் நிலையில் அவர் ஆண்டாள் சந்நிதியில்…


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பிரபலங்களின் பட்டியல்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவக்குமார் என்று நடிகர்கள் பலரும் நிதி நிவாரணம்…


Kabali is failure – Vairamuthu controversy speech

Kabali is failure movie – Poet Vairamuthu speech Kabali is failure – Vairamuthu controversy speech
அண்மை செய்திகள்