10 ஆம் வகுப்பு புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி ! அவர் எங்கே என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

நடிகர்விஜய் சேதுபதி தனது 10 ஆம் வகுப்பில் எடுத்த குரூப் போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் சி.பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 10 ஆம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.

My 10th std group pic ���� #96SchoolGroupPicChallenge �� Its ur turn ������������ @trishtrashers @RameshThilak53… https://t.co/VXJuPQGZRs— VijaySethupathi (@VijaySethuOffl) 1538480511000

இந்நிலையில் 96 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது 10 ஆம் வகுப்பு குரூப் போட்டோவை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்று நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த்ஆகியோருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

தனது 10 ஆம் வகுப்புப் புகைப்படத்தை, வெளியிட்ட விஜய் சேதுபதி, அதில் தான் எங்கே நிற்கிறேன்என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *