முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு!

Tags : AYYA SONG, SEETHAKATHI 2ND LOOK POSTER, VIJAY SETHUPATHI, Category : TAMIL NEWS,

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க தனது திறமையாலும், அபாரமான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் நீங்கா இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. திரையுலகில் இதுவரை 24 படங்களை நடித்து முடித்து விட்ட விஜய் சேதுபதிக்கு, சீதக்காதி 25வது படமாகும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வயதான தோற்றத்தில், கையில் புத்தகத்துடன் நாற்காலியில் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கிறார். சீதக்காதியில் விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும், கம்பீரமும் மற்ற தமிழ் நடிகர்களை மிரள வைத்திருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் 2வது லுக் போஸ்டர் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இதில், வேட்டைக்கு போகும் ராஜா வேடத்தில் அதாவது வேடன் வேடத்தில் இருக்கும் போஸ்டர் இடம்பெற்றுள்ளது.


Share :

Related Posts