முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விஜய் ரசிகர்களுக்கு எனது செங்கோலை தீபாவளி பரிசாக தருகிறேன் – வருண் ராஜேந்திரன்!

Tags : Sarkar, Sengol, Vijay, Category : KOLLYWOOD NEWS,

சர்க்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நேற்று செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வருண் ராஜேந்திரன், “டைட்டிலில் எனது பெயரை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அங்கீகாரம் தான் எனக்கு கிடைத்த இழப்பீடு. நான் படத்தை வெளியிட தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடுக்கவில்லை.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணியாற்றியதால் தான் எனக்கு இந்த போராட்ட மனநிலை வந்தது. விஜய் தலைமையில் சர்கார் அமைக்க எனது செங்கோலை விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அளிக்கிறேன்” என்று கூறினார என்பது குறிப்பிடத்தக்கது.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts