தேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு

தேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழித்ததாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கர்ஜெயந்தியின்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக அமமுகதுணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன்உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர்30 ஆம் தேதிமுத்துராமலிங்கத் தேவரின்111 வதுஜெயந்திவிழா மற்றும் 56 வதுகுருபூஜை விழா கொண்டாடப்பட்டது.பசும்பொன்னில் உள்ள அவரதுநினைவிடத்தில்இதற்காகவிழாஏற்பாடுகள்செய்யப்பட்டுஇருந்தது.

இந்த நிலையில் டிடிவி தினகரன் அங்கு வந்து மாலை அணிவித்துவிட்டு சென்றபின் அங்கிருந்த அதிமுக பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. சில மர்ம நபர்கள் அங்கிருந்த அதிமுக பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை கிழித்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு காரணம் டிடிவி தினகரன்தான் என்றுஅதிமுகவினர் குற்றம்சாடினர். மேலும் தனது கட்சி ஆட்களை தூண்டிவிட்டு இப்படி செய்திருப்பார் என்றும் கூறினர்.

இதனைத்தொடர்ந்து அதிமுக பேனர்கள் கிழிப்பு தொடர்பாக டிடிவி தினகரன் உள்பட 100பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிமுகவினரின் புகாரை அடுத்து கமுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *