முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்!

Tags : Ajith, Tamil Cinema, Vijay, Vishwasam, Category : TAMIL NEWS,

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை விஜய்யின் ‘சர்கார்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் அஜித், தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடித்து முடித்தள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு டி.இமான் முதன் முறையாக இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் காமெடி நடிகர்கள் விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ்எனும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்குத் திரைக்கு வந்த விஜய்யின் சர்கார் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.இந்தப் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் இதே நிறுவனமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts