காதலி ஓவியாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்!

ஆரவ் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர். நேற்று ஆரவ்வின் பிறந்தநாள். அவரின் பிறந்தநாள் விருந்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டு ஆரவ்வை வாழ்த்தினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா, நடிகர் ஆரவ்வை சின்சியராக காதலித்து வந்தார். அந்த காதலை ஏற்றுக் கொண்ட நடிகர் ஆரவ், அவருக்கு மருத்துவ முத்தம் எல்லாம் கொடுத்தார். பின்னர் ஒரு காலகட்டத்தில் நான் உன்னை காதலிக்கவில்லை என்று ஓவியாவிடம் கூறிவிட்டார் ஆரவ். இதனால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டே வெளியேறினார். தற்போது பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். மேலும் பொது இடங்களிலும் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் பொது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருவது அவர்களின் வழக்கம்.

இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரவ்வின் பிறந்தநாள் விழாவில்நடிகை ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி ஆரவ்வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆரவ்வின் பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *