‘பிக் பாஸ்’ ரித்விகா என்ன சாதி?

என்ன சாதி என்ற தேடல் தொடர்பாக, நடிகையும் ‘பிக் பாஸ்’ வெற்றியாளருமான ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார்

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பால், அனைவரது பாராட்டையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘கபாலி’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரித்விகா. அவருக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.

’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்குப் பிறகு, சமூகவலைத்தளங்களில் ரித்விகா என்ன சாதி என்று பலரும் தேடியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் ரித்விகா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதிச் சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..

இவ்வாறு ரித்விகா தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *