கவுண்டமனி வரிசையில் இடம் பிடித்த யோகி பாபு : தர்மபிரபு 2ஆவது போஸ்டர் வெளியீடு!

யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் தர்ம பிரபு படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னர்களான கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரது வரிசையில் இடம் பிடித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. காமெடி கதாபாத்திரங்களைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் அசராமல் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வந்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் ஹீரோ அளவிற்கு உயரத்தை எட்டினார். இப்படத்தைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், ஜுங்கா ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கவுண்டமனி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோரைப் போன்று யோகி பாபுவும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். விமலை வைத்து கன்னிஇயக்குனர் முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு தர்ம பிரபு என்று டைட்டில் வைத்துள்ளனர்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில் புதிய எமனை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. அந்தப் பதவிக்கு வாரிசு அடிப்படையில், யோகி பாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இறுதியில், யாருக்கு எமன் பதவி செல்கிறது? அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கரு. ஸ்ரீவாரி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் முத்துக்குமரன் கூறும்போது “குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சிரிக்க வைக்கும் படமாக தர்மபிரபு தயாராகிறது. சமீபத்தில் தனது உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் குரல் வளத்தாலும் அனைவரையும் தன் ரசிகர்களாக இழுத்து வைத்துள்ள யோகிபாபு எமன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய பலம்.

பல கோடி ரூபாய் செலவில் எமலோகம் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படயிருக்கிறது. வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார். இந்த நிலையில், இப்படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், யோகி பாபு எமதர்ம ராஜா வேடத்தில் கம்பீரமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், எமதர்மராஜா இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

கவுண்டமனி வரிசையில் இடம் பிடித்த யோகி பாபு! Yogi Babu Dharma Prabhu


https://www.youtube.com/watch?v=I1xu65SHVZc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *