ரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்!!

ரன்வீர்-தீபிகா தம்பதியினர் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாவையும் கொடுத்துள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவரும், முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து, தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்தாலியில் உள்ள லேக் கோமா பகுதியில், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகையை வாடகைக்கு எடுத்து, அங்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தீபிகா படுகோனே சார்பில், வரும் 21ம் தேதி பெங்களூருவில் வரவேற்பு நிகழ்ச்சியும், அதன் பின் ரன்வீர், தீபிகா இருவரும் இணைந்து திரையுலகப் பிரமுகர்களுக்காக டிசம்பர் 1ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் தங்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன், தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்ஸையும் வழங்கியுள்ளனர். அதைப் பெற்றுக்கொண்டவர்கள், மைசூர் பா மிகவும் சுவையாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால், ரசிகர்கள் பலரும் ரன்வீரும் தீபிகாவும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பிரியர்களா என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *