முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்

Tags : Actor Arya, Avan Ivan Movie, Director Bala, Singampatti Zamin, Sorimuthu Ayyanar Kovil, Category : TAMIL NEWS,

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து ‘அவன்-இவன்’ படத்தில் அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அப்படத்தின் இயக்குநர் பாலா நேரில் ஆஜரானார்.

கடந்த 2011ம் ஆண்டில், முற்றிலும் நகைச்சுவை, கொஞ்சம் சென்டிமென்ட் என பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘அவன்-இவன்’. விஷால், ஆர்யா இணைந்து நடித்திருந்த இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் சிங்கம்படி ஜமீன் பற்றியும், தென்னக மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றியும் அவதூறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி, கடந்த 2011ம் ஆண்டில் வழக்கு முறையிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவன்-இவன் பட இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவர்களுக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அதை தொடர்ந்து, இன்று இயக்குநர் பாலா, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அதன் காரணமாக, பாலா மீது பிறக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்படுவதாகவும், நடிகர் ஆர்யா மீதான பிடிவாரண்ட் தொடர்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் அவன்-இவன் பட விவகாரம் தொடர்பாக அவரும் 16ம் தேதி நேரில் ஆஜராக ஆணை பிறப்பித்தார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts