முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தயாரிப்பு துறையில் இறங்கிய மணிரத்னம்!

Tags : CCV, Chekka Chivantha Vaanam, Dhana Sekaran, Govind Vasantha, Madras Talkies, Maniratnam, Category : TAMIL NEWS,

‘செக்க சிவந்த வானம்’ படத்தை அடுத்து இயக்குனர் மணிரத்னம், தற்போது ஒரு படத்தை தன் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்.

மல்டிஸ்டார்களை வைத்து மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, நடிகைகள் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்தப் படத்துக்குத் தயாராகிவிட்டார். தற்போது படத்தை இயக்கவில்லை. தயாரிக்க மட்டும் செய்கிறார். ஆம்! மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை அவரின் உதவியாளர் தனா இயக்கவுள்ளார்.

இயக்குனர் தனா, விஜய் ஜேசுதாஸ், பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘படைவீரன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். இவர் விஜய் சேதுபதியின் ‘96’ படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts