முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்!

Tags : Chennai Weather, Cyclone Gaja, Cyclone Gaja In Andhra Pradesh, Cyclone Gaja In Ap, Cyclone Gaja In Tamil Nadu, Gaja Cyclone Red Alert, Tamil Nadu Weather, Category : TAMIL NEWS,

சென்னை : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடற்கரை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவை வலுவாக தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கஜா புயலாக மாறியுள்ளது. வரும் 15ஆம் தேதி இது சென்னை அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால், தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் புதுச்சேரி, கடலூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கஜா புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் காற்றுடன் தீவிர மழை பெய்யும். அதாவது குறைந்த நேரத்தில் 200 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் பாதிப்பு எப்படி இருக்கும்?கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கஜா புயல் கடந்தால் சென்னைக்கு மழையால் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் சென்னைக்கு அருகில் கடந்தால் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்ப்பது நிச்சயம்.

எப்போது தாக்கும்:கஜா புயல் மேற்கு, தென் மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்த புயல் 15ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், 14ம் தேதி முதல் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.

ரெட் அலர்ட் :கடந்த முறை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டதால், இந்த ரெட் அலர்டை மக்கள் சாதாரணமானதாக எண்ணிவிட வேண்டாம். இந்த முறை மழை தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தகவல் பெற:இந்தப் புயலைப் பற்றிய தகவல்களை யார் வேண்டுமானாலும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.
https://www.cyclocane.com/gaja-storm-tracker/ என்ற முகவரிக்குச் சென்று கஜா புயலில் வழித்தடத்தை பின்தொடரலாம்.

வரைபடத்துடன் புயலின் இருப்பிடம் இத்தளத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. இதில் புயல் எப்போது எந்த இடத்திற்கு நகரும் என்றும் அந்த நேரத்தில் காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும் என்றும் தெரிந்துக்கொள்ளலாம்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts