முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விவி மினரல்ஸ் ரூ.800 கோடி வரிஏய்ப்பு; சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல்: ஐ.டி!

Tags : IT OFFICIAL RAID, VV MINERALS OFFICE, VV MINERALS RAID, VV MINERALS TAX CHEATING, Category : TAMIL NEWS,

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு விவி மினரல்ஸ் இயங்கி வருகிறது. கடற்கரையோர மண்ணில் இருந்து தாது மணலை பிரித்தெடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

மேலும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து கடந்த 25ஆம் தேதி முதல் விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு, அலுவலகங்கள், அவரது மகன் வீடு, அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வரை விவி மினரல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 98 இடங்களில் ஐடி சோதனை நடத்தியது. அதில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவி மினரல்ஸ்க்கு ரூ.1,800 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை கணக்கில் காட்டப்படாத வருவாய் வந்துள்ளதாக கூறியுள்ளனர். வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Share :