முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! - tamil

Tags : Actress Keerthi Suresh, Keerthi Suresh, Rajamouli, RRR, Category : TAMIL NEWS,

‘சர்கார்’ படத்தை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், ராஜமௌலி இயக்கவுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடிக்கவுள்ளார்.

கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். மேலும் இவர் தெலுங்கிலும் நடித்து பிரபலமாகிவிட்டார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘மகாநதி’. இந்தப் படம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘சண்டைக்கோழி 2’, ‘சாமி 2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். மீண்டும் ஒருமுறை என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாவித்ரியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இம்மாதம் 28 ஆம்தேதி முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியானது. இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் பிரபாஸ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts