முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ராணி வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க தடை இல்லை

Tags : HIGH COURT, SUNNY LEONE, VEERAMADEVI, Category : KOLLYWOOD NEWS,

ராணி வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க தடை கோாி தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரா் தொிவித்ததை தொடா்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த சரவணன் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரா். கணவரின் இறப்புக்குப் பிறகு வீரமாதேவி, சதி எனும் உடன்கட்டை ஏறினாா். அவரது வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் “வீரமாதேவி” என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளாா். ஆபாச படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆபாச பட நடிகை விருது பெற்ற சன்னி லியோன் வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிப்பது வீரமாதேவியை அவமதிக்கும் செயலாகும். மேலும் வீரமாதேவிக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் கட்டி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இதுபோன்ற சூழலில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா், நடிகைகள் எந்தக் கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். இம்மனு பொதுநல வழக்கில் வராது. இதுபோன்ற மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீா்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதனைத் தொடா்ந்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரா் தொிவித்தாா். அதன்படி வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க தடையில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.


Share :

Related Posts