முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

‘ரஜினி முருகன்’ படம் என்னுடைய கதை: இயக்குநர் சமுத்திரகனி!

Tags : RAJINI MURUGAN, SAMUTHIRAKANI, TAMIL CINEMA, சமுத்திரகனி, ரஜினி முருகன், Category : KOLLYWOOD NEWS,

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ படம் என்னுடைய கதை என்று இயக்குநர் சமுத்திரகனி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ‘சர்கார்’ படத்தின் கதைத்திருட்டு விவகாரம் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிவந்தது. ஒருவழியாக இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தயாரிப்பு நிர்வாகம். இந்த நிலையில் ‘கதைத்திருட்டு’ குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, ‘கதைத்திருட்டு’ என்ற வார்த்தையே தவறு. ஒரே சிந்தனை என்றுதான் கூற வேண்டும். ஒருசில வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையை கூறினேன். அவர் அந்த கதையை கேட்டுவிட்டு இதே போன்ற ஒரு கதையில் தான் நான் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடிக்கிறேன். அதில் உங்களுக்குக்கூட ஒரு கேரக்டர் உள்ளது என்றார் சிவகார்த்திகேயன்.

மறுநாள் இயக்குனர் பொன்ராமை வரவழைத்து ‘ரஜினி முருகன்’ கதையை கேட்டபோது பாதிக்கு மேல் நான் எழுதிய கதையாக இருந்தது. நானும், அவரும் மதுரைக்காரங்கதான். எனவே எங்களுக்குள் ஒரே சிந்தனை வந்ததில் எந்த வியப்பும் இல்லை.எனவே ‘கதைத்திருட்டு’ என பெரிய வார்த்தை கூறி இதனை பெரிதுபடுத்தாமல் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது இருவரும் உட்கார்ந்து பேசி சமாதானமாக முடிவெடுத்து செல்வது தமிழ் சினிமாவுக்கு நல்லது என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.


Share :

Related Posts