முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சர்கார் சிறந்த அரசியல் படம்: இந்த மாதிரி மாற்றம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்: சுசீந்திரன்!

Tags : SARKAR, SARKAR COLLECTIONS, SARKAR IN TAMIL ROCKERS, SARKAR REVIEW, SARKAR TAMIL MOVIE, SUSEENTHIRAN, THALAPATHY VIJAY, Category : TAMIL NEWS,

தளபதி விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3,400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் படம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படம் குறித்து பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்கார் ஒரு சிறந்த அரசியல் திரைப்படம். விஜய்யின் நடிப்பு, ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதை எல்லாமே நேர்த்தி…ஹாட்ரிக் வெற்றிக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி ஒரு அரசியல் மாற்றம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share :

Related Posts