அஜித் படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியானது புகைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘ஏகன்’ படத்தில், சிவகார்த்திகேயன் சிறு வேடத்தில் நடித்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில், காமெடி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று, பின்னர் தொகுப்பாளராகி, அதன்மூலம் படங்களில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது, அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதற்கு அவரது கடின உழைப்பே காரணம்.
<p>அஜித் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் – வெளியானது புகைப்படம்</p>
இந்நிலையில், அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித் நடித்த படம் ஒன்றில், சின்ன கதாபாத்திரத்தில் நடித்தது தெரிய வந்துள்ளது. அஜித்தின் ‘ஏகன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் அஜித்துடன் சிவகார்த்திகேயன் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளார். ஆனால், அந்தக் காட்சி படத்தில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், அப்படத்தில் பணியாற்றிய சிற்றரசு என்பவர், அஜித்தும் சிவகார்த்திகேயனும் இடம்பெற்ற காட்சியின் படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.