ஐபோன் ஆர்டர் செய்த நகுலுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் செய்த மோசடி வேலை!

இணையதளங்கள் மூலம் விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் பயங்கரமான அதிர்ச்சியும் காத்திருக்கிறது. நடிகர் நகுலும் அதில் விதி விலக்கல்ல.

பாய்ஸ் படம் தமிழில் அறிமுகமான நடிகர் நகுல். அதன்பிறகு உடல் எடைக் குறைத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியான செய் திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. தற்போது ‘எரியும் கண்ணாடி’ படத்தில் நகுல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தன் மனதுக்கு விருப்பமான ஸ்ருதி என்ற பெண்ணை நகுல் கரம்பிடித்தார். இவர்களுக்கு மூன்றாவது ஆண்டு திருமண நாள் நெருங்கும் நிலையில், தன் மனைவிக்கு பரிசு கொடுப்பதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான ஐபோனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் நகுல் ஆர்டர் செய்தார்.

VERY IMPORTANT: I RECIEVED A FAKE IPHONE BY ORDERING THROUGH FLIPKART @Flipkart Read ahead. @flipkartsupport… https://t.co/Yq0blZrclc— Nakkhul (@Nakkhul_Jaidev) 1543762680000
அதன்பிறகு அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 2 நாள் கழித்து வீடு திரும்பிய நகுல், பார்சலை பிரித்து பார்த்தபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்தது ஐபோன் அல்ல. அது மலிவு விலையிலான சுமார் போன்.

Check out this video @Flipkart @flipkartsupport & @AppleSupport https://t.co/TJGzYIFN6V— Nakkhul (@Nakkhul_Jaidev) 1543762849000
இதனால் அதிர்ச்சியடைந்த நகுல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார். ஆனால் அவர்கள் பிரச்னையை தீர்க்காமல் அலைகழித்துள்ளனர். இந்நிலையில் தன்னை போல் வேறு யாரும் ஏமாந்து விடக்கூடாது என நகுல் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நகுலின் இந்த டுவிட்டை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *