ஆதாரம் சேகரிக்கிறேன் புதிய சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி!

திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பல பெண்களிடமிருந்து ஆதாரம் திரட்டிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஸ்ரீ ரெட்டியின் இந்த பரபரப்பைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாறு ரெட்டி டைரி என்ற டைட்டிலில் படமாகிறது. மேலும், நடிக்க வாய்ப்பில்லாமல், பலர் மீது குற்றம் சாட்டியதாக கூறப்படும் ஸ்ரீ ரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு தமிழ் நடிகர் மீது சமீபத்தில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியிருந்தார். என்னை பொது கழிப்பிடம் போன்று பயன்படுத்துகிறார் என்றும், வலியும், காயமும் இன்னமும் ஆறவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், ஒரு பிணத்தைப் போன்று தான் நான் மற்றவர்களுக்கு பயன்பட்டேன். இப்போது ஒரு தமிழ் நடிகர் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஒரு பெண் பித்தர் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மீண்டும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய புகார் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: தகவல்களை வெளியிடுவதில், சிரி எவ்வளவு பிரபலமானது என்று அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீயும் அப்படித்தான். சினிமா துறையில் இருக்கும் முக்கிய புள்ளிகளின் காதல் விவகாரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, பல பெண்களிடமிருந்து தகவல்களை திரட்டிக் கொண்டும் இருக்கிறேன். இந்த தகவல் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை ஒழித்து, அதனால், பாதிக்கப்படும் பெண்களை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *