முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அஜித்துடன் இணையவிரும்பும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!? - tamil

Tags : A.R.Murugadoss, Ajith, Ajith Kumar, Sarkar, Thala, Vijay, Viswasam, Category : KOLLYWOOD NEWS,

அஜித்துக்காக ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

அஜித்தின் ‘தீனா’ படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் அஜித்துக்கு ‘தல’ என்ற பட்டம் கிடைத்தது. அஜித்தை வைத்து இயக்கியப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், விஜயகாந்த், சூர்யா ஆகிய முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார். மேலும் இவர் இந்திய சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

இவர் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய அஜித்துடன், ‘தீனா’ படத்துக்குப் பிறகு ஒருமுறை கூடஇணையவில்லை.‘சர்கார்’ படத்துக்குப் பிறகுஅஜித்தை வைத்து புதிய படம் இயக்கும் ஆசையில் முருகதாஸ் இருக்கிறார். தல அஜித்துக்கு ஏற்ற மாஸான ஸ்கிரிப்ட் தன்னிடம் இருப்பதாக முருகதாஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ், ‘‘அஜித் அழைப்புக்காக காத்திருக்கிறேன்; அவர் அழைத்தால் உடனே படத்தை ஆரம்பித்துவிடலாம்” என்றார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts