முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தமிழக முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Tags : Dmk Raja, Edappadi Palanisamy, TN Ministers, Category : TAMIL NEWS,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக-வை சேர்ந்த ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்தும், முதல்வர் உட்பட அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும், கடந்த செப்டம்பர் 18ம் தேதி பெரம்பலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். அந்த கூட்டத்தில் பேசிய ராசா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆ.ராசா மீது வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் புகார் அளித்துள்ளார்.இப்புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் நகர போலீசார் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts