த்ரில்லர் படத்தில் பிஃக்பாஸ் யாஷிகா!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்த நடிகை யாஷிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு மக்களின் மனதில் மேலும் இடம்பிடித்தார்.

4 இந்நிலையில் நடிகை யாஷிகா, பெயரிடப்படாத ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மஹத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக யாஷிகா நடிக்கிறார். மேலும் படத்தில் முனீஸ்காந்த், மா.பா.கா.ஆனந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

mahatyashika281118_2 படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பரதன் பிக்சர்ஸ் ஆர்.வி.பரதன் படத்தை தயாரிக்கிறார். படத்தை மெக்வென் இயக்குகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள ஹாரர் த்ரில்லர் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *