நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை தொடர்ந்து, இறுதிசடங்கு செலவையும் ஏற்ற சிவகார்த்திகேயன்!

மறைந்த நெல் ஜெயராமனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திருவாரூர், கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடைப்பெற உள்ளது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமனை பல அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், அவர் காலமானதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி காலை 5.10 மணியளவில் காலமானார்.

சிவகார்த்திகேயன் உதவி :இந்நிலையில் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். ஏற்கனவே நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை முழுவதையும் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *