தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

By Admin - December 5th, 2018

Tags : A.priyadhaarshini, Jayalalitha, Nithya Menen, The Iron Lady, The iron lady first look poster, Category : Tamil News,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் 5ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வா் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலிலதாவின் நினைவிடத்தில் முதல்வா், துணைமுதல்வா், அமைச்சா்கள், தொண்டா்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படத்தை எடுக்கயிருப்பதாக பெண் இயக்குனர் ஏ.பிரியதர்ஷினி (A Priyadhaarshini) கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் இடம்பெற்றிருப்பது ஜெயலலிதாவா? இல்லை நித்யா மேனனா என்று கேட்கும் அளவிற்கு இந்த் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் டைட்டிலும் தி ஐயன் லேடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இவருக்கு 2ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வந்த சக்தி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, இயக்குனர்கள், பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோர் உள்பட பலர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.

Related Posts

Vikram IruMugan movie new stills

Vikram IruMugan movie new stills Vikram IruMugan movie produced by Shibu Tameens. Vikram IruMugan Starring…

அதிமுகவில் இணைய அப்பாயின்மென்ட் வாங்கிய தீபா : கார் டிரைவரை அனுப்பியதால் கடுப்பான பன்னீர்!

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்க, சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தரப்பில் இருந்து அப்பாயின்மென்ட் கேட்கப்பட்டது.ஓபிஎஸ்சும்…

ஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க வே காரணம்! சசிகலா

ஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க.வும் காரணம்: சிறையில் சசிகலா பற்ற வைத்த புது நெருப்பு அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. விரைவில் இணைய இருக்கிறது!…

Jayalalitha and Sasikala old picture

Jayalalitha and Sasikala old picture

ஜெயலலிதாவுக்கு பின் சட்டப்பேரவையில் தனி ஒருவனாக டிடிவி

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையின் போது தனி ஒருவராக, எதிர்கட்சிகளின் வரிசையில் சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அமர்ந்திருந்தது பலரையும்…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share