மோடி நல்லாட்சி செய்கிறார் – ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.O திரைப்படம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது ரஜினி `பேட்ட’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படப்பிடிப்புகளுக்கு மத்தியில் தனது மன்றத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, செய்தியாளர்கள் சந்திப்பு என பிஸியாக உள்ளார். இதற்கிடையே, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, படங்கள் மற்றும் தனது அரசியல் என்ட்ரி குறித்து இந்தியா டுடே இதழுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ரஜினி, “அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்” எனக் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள். ஆனால் அவர்கள் யார், அவர்கள் திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டார்கள். எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை. தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப் பெறுவதைவிட மிகவும் இது முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

மக்கள் மனதில் யார்? டிடிவி தினகரனா? ஸ்டாலினா? | TTV Dhinakaran Vs M.K.Stalin


https://www.youtube.com/watch?v=c_bSf2pfm00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *