முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இரண்டாம் நாளில் காத்து வாங்கிய 2.0 தியேட்டர்கள்- ஏன்..??

Tags : 2.0, 2.0 Box Office Collection, Rajinikanth, Spectacular To Flop, Category : TAMIL NEWS,

2.0 திரைப்படத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வந்தாலும், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தயாரிப்பாளருக்கு வசூல் கிடைக்கவில்லை என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியா இதுவரை கண்டிராத ரூ. 543 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 படம், கடந்த 29ம் தேதி வெளியானது. தமிழில் நேரடியாகவும் ஹிந்தி, மலையாளம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரான படம் ஒன்று, வெளியான முதல் நாளிலேயே அதிக வருவாய் ஈட்டிய படம் என்ற சாதனையை 2.0 படைத்தது. அதன்படி, இந்தியாவில் ரூ. 50 கோடிக்கு மேலேயும் , அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ரூ. 25 கோடிக்குள்ளேயும் என மொத்தமாக, இப்படம் ரூ. 74 கோடியை முதல் நாள் வசூலாக பதிவு செய்தது.

ஆனால் இதெல்லாம் முதல் நாளில் மட்டும் தான். இரண்டாவது நாளில் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளை தவிர்த்து மற்ற தியேட்டர்களில் 2.0 படத்திற்கான வரவேற்பு குறைந்தளவில் காணப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு படத்தின் தொழில்நுட்பம் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. 2.0, 3டி முறையில் படமாக்கப்பட்டு, 4டி ஆடியோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படமாகும். தொழில்நுட்ப பயன்பாட்டில் இந்திய சினிமாவுக்கே முன்னோடி 2.0 தான்.

எனினும், இந்தியாவில் இந்த அம்சங்களை பயன்படுத்தும் கட்டமைப்புகள் பெரும்பாலான திரையரங்குகளில் இல்லை. குறிப்பாக சென்னையில், எஸ்பிஐ குழுமத்திற்கு கீழ் இயங்கும் சில திரையரங்குகளில் மட்டுமே இந்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுதவிர, மல்டிஃபிளிக்ஸ் போன்ற நல்ல கட்டமைப்பு கொண்ட திரையரங்குகளில் 2.0 படத்தின் சில தொழில்நுட்ப அம்சங்களை அனுபவித்திட முடியும்.

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்டன. அதனால் 2.0 படத்தின் சிறப்பம்ச பணிகளை அனுபவத்திட மக்கள் கூட்டம் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளுக்கு படை எடுக்கின்றன. இதனால் தனியாக இயங்கும் திரையரங்குகளில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, மல்டிஃப்ளிக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், டிக்கெட் கிடைக்கும் போது படம் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் ரசிகர்கள் இருக்கிறார்களாம். ஈரோட்டில் 2.0 படம் வெளியான அன்று, 3டி கண்ணாடிகள் இல்லாததால் படத்தை பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.

இதனால் ரஜினி நடித்துள்ளார் என்பதை காட்டிலும், 2.0 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்களை பார்ப்பதில் பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகள், நவீன கட்டமைப்புக்கு மாற வேண்டும் என்ற முக்கியத்துவத்தை 2.0 உணர்த்தியுள்ளது. இதற்கிடையில், 2.0 படம் வெற்றிப் படம் தான். ஆனால் அதை உறுதி செய்வதில் சற்று கால தாமதம் ஏற்படலாம். தவிர, இன்னும் சில நாட்களுக்கு எந்த புதிய படங்களும் வெளிவரும் திட்டம் இல்லை என்பதால் 2.0 எதிர்பார்த்த வசூலை நிச்சயம் குவிக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts