ரஜினியின் பேட்ட படம் வெளியாவதற்கு முன்னே தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ள தமிழ்ராக்கர்ஸ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பிரபலங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் நேற்று (டிச 3) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. அதன் படி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் நேற்று 6 மணிக்கு பாடலை வெளியிட்டது.

முந்திக் கொண்ட தமிழ்ராக்கர்ஸ்:இந்நிலையில் படக்குழு மரண மாஸ் பாடலை வெளியிடுவதற்கு முன்னரே அந்த பாடலை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டதால் படக்குழுவினரும், தயாரிப்பாளரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Marana Mass Song: இது தலைவர் குத்து- ‘பேட்ட’ மரண மாஸ் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடுX

2.0 ரிலீஸ் :முன்னதாக 500 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட 2.0 படம் வெளியான 6 மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டது.

தற்போது ‘பேட்ட’ படம் வெளியாவதற்கு முன்னரே, அந்த படத்திற்கு பேரதிர்ச்சியை தமிழ்ராக்கர்ஸ் கொடுத்துள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *